புகலூர் கதவணை பணிகளை ஆய்வு செய்த அரசு அதிகாரிகள்.

புகலூர் கதவணை பணிகளை ஆய்வு செய்த அரசு அதிகாரிகள்.
புகலூர் கதவணை பணிகளை ஆய்வு செய்த அரசு அதிகாரிகள். கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, நஞ்சை புகலூர் கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூபாய் 406.50 கோடி மதிப்பீட்டில் கதவணை கட்டும் பணி 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2025 ஜூன் மாதம் நிறைவு செய்ய திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார் 1056 மீட்டர் நீளத்தில் 73 கதவுகளுடன் வினாடிக்கு 3,60,000 கன அடி நீர் வெளியேற்றும் வகையில் அமைக்கப்படும் இந்த கதவணையில் 0.80 டிஎம்சி வரை தண்ணீர் சேமிக்கலாம். இந்த கதவனை மூலம் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த திட்டத்தை இன்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் தமிழக அரசின் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் மங்கத் ராம் சர்மா பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், ஏற்கனவே திட்டமிடப்பட்ட காலத்திற்குள் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். .
Next Story