இலஞ்சியில் பரண்மேல் ஆடு வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு

X

பரண்மேல் ஆடு வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு
தென்காசி மாவட்டம் கிள்ளிகுளம் வ.உ.சி வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இளங்கலை இறுதி ஆண்டு மாணவிகள் தென்காசி வட்டாரத்தில் கிராமப்புற விவசாய அனுபவப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதில் பரண்மேல் ஆடுவளர்ப்பு முறை கால் அழுகல் மற்றும் பிற நோய்களின் அபாயத்தைக் குறைப்பதற்கு உதவுகிறது. மிகக் குறைந்த முதலீட்டில், ஆடு வளர்ப்பு முறையை சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு லாபகரமான முயற்சியாக மாற்றலாம் என கல்லூரி மாணவிகள் விளக்கமளித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story