போரில் வீர மரணம் அடைந்த இராணுவ வீரர்களின் போர் நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி வருகிறார்...

அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் இராணுவ பயிற்சி கல்லூரியில் பன்னாட்டு பயிற்சி அதிகாரிகளுக்கு பட்டமளிப்பு வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்க்காக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வருகை புரிந்துள்ள நிலையில்,தற்போது இராணுவ பயிற்சி கல்லூரியில் இராணுவ வீரர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டு போரில் வீர மரணம் அடைந்த இராணுவ வீரர்களின் போர் நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி வருகிறார்... நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் இராணுவ பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்று வரும் பன்னாட்டு இராணுவ பயிற்சி அதிகாரிகளுக்கு பட்டமளிப்பு வழங்கும் விழாவில் பங்கேற்ப்பதற்க்காக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்து,கோவையில் இருந்து சாலை மார்க்கமாக கோத்தகிரி வழியாக குன்னூர் வெலிங்டன் இராணுவ பயிற்சி கல்லூரிக்கு வருகை புரிந்தார். முன்னதாக தற்போது வெலிங்டன் இராணுவ பயிற்சி கல்லூரியின் முகப்பில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு இராணுவ அதிகாரிகள் இராணுவ மரியாதையுடன் கூடிய வரவேற்ப்பு அளித்தனர். தற்போது மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் போரில் வீர மரணம் அடைந்த இராணுவ வீரர்களின் போர் நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகிறார். தொடர்ந்து பன்னாட்டு இளம் பயிற்சி அதிகாரிகளுக்கு பட்டமளிப்பு வழங்கும் விழாவில் பங்கேற்க்கிறார். இந்த விழாவில் பயிற்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.இந்த பட்டமளிப்பு விழாவில் முப்படை தளபதி அனில்சௌகான்,டிஎஸ்எஸ்சி கமாண்டன்ட் வீரேந்திர வாட்ஸ் மற்றும் எம்ஆர்சி கமாண்டன்ட் கிரிஷ் நேந்து தாஸ்‍ ஆகியோர் கலந்து உள்ளனர். பின்னர் குன்னூர் இராணுவ பயிற்சி கல்லூரியில் இராணுவ நிகழ்ச்சியில் பங்குபெற்ற பின்பு ஜிம்கான கிளப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து கோவையில் உள்ள சூலூர் விமானப்படை தளத்திற்கு சென்று டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வருகையையொட்டி இராணுவம் மற்றும் நீலகிரி மாவட்டம் காவல்துறையினர் மூலம் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Next Story