தீயணைப்பு நிலையம் அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

X
Paramathi Velur King 24x7 |10 April 2025 9:08 PM ISTபரமத்தி வேலூர் வட்டத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
பரமத்திவேலூர், ஏப்.10: பரமத்தி வேலூரில் தீயணைப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்தும், திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் இதற்கு முட்டுக்கட்டை போடும் அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் பரமத்தி வேலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். பரமத்தி வேலூர் வட்டம், பரமத்தி, கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், மோகனூர் வட்டம், மோகனூர் ஒன்றியம் மற்றும் வேலூர், பரமத்தி, வெங்கரை, பாண்டமங்கலம்,பொத்தனூர் என 5 பேரூராட்சிகள், 40 கிராம ஊராட்சிகள் உள்ளன. இங்கு தென்னை, வாழை, கரும்பு, வெற்றிலை, நெல், மரவள்ளி, கோரை போன்ற பனப்பயிர் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. ஜேடர்பாளையம், கபிலர்மலை, பிலிக்கல்பாளையம், அண்ணா நகர், சாமிநாதபுரம், பெரியசோளிபாளையம், சின்னசோளிபாளையம், பெரிய மருதூர், சின்ன மருதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் உள்ளன. சில நேரங்களில் வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டையில் தீ பிடித்து எரியும்போது கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் மற்றும் நாமக்கலில் இருந்து வரும் தீயணைப்பு வாகனம் வர கால தாமதமாக ஆவதால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். கபிலர்மலை பகுதியில் தேங்காய் மஞ்சு நார் தயாரிக்கும் ஆலைகளில் உள்ள கண்வேயரில் அடிக்கடி தீப்பிடித்து தேங்காய் நார் முற்றிலும் எரிந்து விடுகிறது. அதனால் ஆலையினர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் விவசாய தோட்டங்களிலும், வீடுகளிலும் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரியும் போது சரியான நேரத்தில் தீயணைப்பு வாகனம் வட முடியாததால் சேதம் மதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2022-ல் பரமத்தி வேலூர் தொகுதிக்கு தீயணைப்பு நிலையம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. இதை அடுத்து கபிலர்மலை மற்றும் பெரியசோளிபாளையம் ஊராட்சி சிறுகிணத்துப்பாளையம் கிராமத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடம் தேர்வு செய்தனர். ஆனால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் விரைந்து தீயணைப்பு நிலையம் அமைக்கக்கோரி பிலிக்கல்பாளையம் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பரமத்தி வேலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சம்பந்தப்பட்ட இடத்தில் உடனடியாக தீயணைப்பு நிலையம் அமைக்க கோரி புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story
