ஜெயங்கொண்டத்தில் பொதுமக்களை மிரட்டும் வகையில் கையில் கத்தியுடன் போதையில் சுற்றித்திரிந்த வாலிபர் கைது

X
அரியலூர், ஏப்.10- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் அணில் என்கிற பிரேம்குமார் இவர் 2 1/2 அடி நீளம் உள்ள கத்தியை முதுகில் சொருகியவாறு கஞ்சா போதையில் பொதுமக்களை மிரட்டும் வகையில் சுற்றி திரிந்துள்ளார் இது குறித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து அணில் என்கிற பிரேம்குமாரை தேடி வந்தனர் இந்நிலையில் அவர் ஜெயங்கொண்டம் அருகே கொம்மேடு செல்லும் பாதையில் சுடுகாட்டு பகுதிக்கு அருகே இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் கையில் கத்தியுடன் கஞ்சா போதையில் நின்றிருந்த அணில் என்கிற பிரேம்குமாரை கைது செய்தனர் மேலும் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story

