அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண் பட்டயப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண் பட்டயப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
X
பட்டயப் பயிற்சி
தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் தமிழ்நங்கை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,  பட்டுக்கோட்டை கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண் பட்டயப் பயிற்சி நடைபெறவுள்ளது. கூட்டுறவு மேலாண் பட்டயப் பயிற்சி முடிக்காமல் கூட்டுறவு சங்கங்கங்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்கள் அனைவரும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம். பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று மூன்றாண்டு பட்டயப் படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 01.05.2025 அன்று குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. இப்பயிற்சிக்கு அதிகாரபூர்வ இணையதளமான www.tncu.gov.tn.in மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சிக்கான கூடுதல் விவரங்கள், வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றை இணையத்தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். பயிற்சிக்கு வரும் 16 ஆம் தேதி முதல் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது பட்டுக்கோட்டை கூட்டுறவு மேலாண் நிலையத்திற்கு அசல் சான்றிதழ்களுடன் நேரில் வந்து இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அதற்கான சான்றிதழ்கள் மற்றும் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ.100ஐ இணைய வழியில் மட்டுமே செலுத்த வேண்டும். இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் மே.6 ஆம் தேதி பிற்பகல் 5.30 மணி வரை மட்டுமேயாகும். அதற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இணையவழி மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இணையவழியாக அல்லாமல் நேரடியாகவோ அல்லது தபால் மூலமோ மற்றும் கூட்டுறவு மேலாண் நிலையங்களுக்கு விண்ணப்பித்திருந்தால், அவ்வாறு பெறப்படும் விண்ணப்பம் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.  பயிற்சிக்கான விண்ணப்பங்கள் மற்றும் பயிற்சி குறித்த மேலும் விபரங்களுக்கு முதல்வரின் அலைபேசி எண்கள் 9486045666, 9443587759 தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Next Story