திருச்சிற்றம்பலத்தில் கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சாம்பல்

X
தஞ்சாவூர் மாவட்டம், திருச்சிற்றம்பலம் மேற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு . (வயது 40) தென்னங்கீற்றுகள் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ஷாலினி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் திருச்சிற்றம்பலத்தைச் சேர்ந்த ஒருவரது தென்னந்தோப்பில் கூரை வீடு அமைத்து அதில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதின் காரணமாக புதன்கிழமை மாலை களத்தூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு ஷாலினி தனது 2 குழந்தைகளுடன் சென்று விட்டார். பிரபு மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்து வீட்டிலிருந்த டிவி, மிக்சி, பீரோ, ஆவணங்கள், துணிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் முழுவதும் எரிந்து சாம்பல் ஆனது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுத்தனர். தீ விபத்துக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து திருச்சிற்றம்பலம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story

