பள்ளூர் அருகே கள்ளத்தனமாக டாஸ்மாக் மது விற்பனை

பள்ளூர் அருகே கள்ளத்தனமாக டாஸ்மாக் மது விற்பனை
X
கள்ளத்தனமாக டாஸ்மாக் மது விற்பனை
ராணிப்பேட்டை மாவட்டம் முருங்கை கிராமத்தில் டாஸ்மாக் மது பாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து ஒருவர் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தக்கோலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நேற்று சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை செய்தனர். அப்போது முருகேசன் என்பவர் வீட்டில் இருந்து 20 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் அவரை கைது செய்தனர்.
Next Story