விளைவித்த முட்டைக்கோசுகளை அழிக்கும் விவசாயிகள்

விளைவித்த முட்டைக்கோசுகளை அழிக்கும் விவசாயிகள்
X
தாளவாடி மலைப்பகுதியில் டிராக்டரை ஏற்றி முட்டைக்கோசை அழிக்கும் விவசாயிகள் சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்
ஈரோடு மாவட்டத்தின் கடைகோடியில் கடல் மட்டத்தில் இருந்து 1,105 மீட்டர் உயரத்தில் உள்ள கிராமமான தாளவாடி, கொங்கள்ளி, பனகஹள்ளி,தொட்டகாஜனூர் பாரதி நகர், கெட்டவாடி அருள்வாடி போன்ற 40 -க்கும் மேற்பட்ட கிராங்களில் கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளி, பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி, முட்டைகோஸ், காலிபிளவர், பீன்ஸ் ஆகிய பயிர்களை பயிரிடுவது வழக்கம். இப்பகுதியில் சுமார்500 ஏக்கர் பரப்பளவில் முட்டைகோஸ் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது முட்டைகோஸ் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் உள்ளூர் மற்றும் மேட்டுப்பாளையம், கோவை பகுதியில் உள்ள காய்கறி மண்டிக்கு விற்பனைக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் முட்டைகோஸ் வாங்க வரும் வியாபாரிகள் ஒரு ஒரு கிலோ முட்டைக்கோசை ரூ.1 -க்கு கேட்பதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் வேதனை அடைந்த விவசாயிகள் முட்டைக்கோசை டிராக்டர் மூலம் ஏற்றி அழித்து வருகின்றனர். விவசாயிகள் டிராக்டர் மூலம் முட்டைக்கோசை அழிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது,3 மாத பயிரான முட்டைகோஸ் 1ஏக்கருக்கு நாற்று, களை எடுத்தல், உரம், மருந்து என ரூ.80 வரை செலவு ஆகிறது . இம்முறை தண்ணீர் பற்றாக்குறை இல்லை என்பதால் பயிரிட்ட முட்டைகோஸ் நன்கு விளைந்துள்ளது. வெளி மார்க்கட்டில் தற்போது கிலோ ரூ.15-க்கு முட்டைகோஸ் விற்றாலும் விவசாயிகளிடம் இருந்து 1 ரூபாய் மட்டுமே வியாபாரிகள் கேட்கின்றனர். குறைந்தபட்சம் ரூ.10-க்கு விற்றால் தான் ஓரளவு கட்டுப்படியாகும். ஆனால் விளைச்சல் அதிகம் என காரணம் கூறி குறைவான விலைக்கு கேட்பதால், முட்டைகோசை அறுவடை செய்வதா இல்லை அப்படியே பூமியிலேயே விட்டு விடுவதா என்று புரியவில்லை. கடந்த 6 மாதமாக இதே நிலை நீடிப்பதால் சில விவசாயிகள் உழவு செய்து அளித்து வருகின்றனர்.இதனால் ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர். மேலும் இந்த விஷயத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story