திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் தெப்போற்ஸவம்

X
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோயில் தெப்போற்ஸவம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இக்கோயிலில் நிகழாண்டு தெப்பத் திருவிழா ஏப். 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடா்ந்து நாள்தோறும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக வியாழக்கிழமை தெப்போற்ஸவம் நடைபெற்றது. முன்னதாக, நண்பகல் 12 மணிக்கு சுவாமிக்கு விசேஷ அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மாலை 5 மணிக்கு மேல் சுவாமி தெப்பத்துக்கு புறப்பட்டு பிரம்ம தீா்த்தமாகிய தெப்பக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள தெப்பத்தில் எழுந்தருளினாா். இரவு 7 மணி முதல் சுவாமி, அம்பாள் 5 சுற்றுகளாக உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இதையொட்டி தெப்பக்குளம் வண்ண, வண்ண மின் விளக்குகள் ஒளிர, மலைக்கோட்டை முழுவதும் மின்னொளியில் ஜொலித்தது. தெப்போற்ஸவத்தை முன்னிட்டு சிறப்பு திருமுறை இன்னிசையும், சிறப்பு நாகசுர இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில், ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
Next Story

