கோவை: திரையரங்குகளில் களைகட்டிய குட் பேட் அக்லி கொண்டாட்டம்!

X
அஜித் குமார் மற்றும் த்ரிஷா கிருஷ்ணன் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நேற்று திரையரங்குகளில் வெளியான அதிரடி நகைச்சுவைத் திரைப்படம் குட் பேட் அக்லிக்கு கோவை மாநகரில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படத்தை காண திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று காலை முதலே கோவை மாநகர திரையரங்குகள் திருவிழாக்கோலம் பூண்டிருந்தன. அஜித் குமாரின் ரசிகர்கள் மேள தாளங்கள் முழங்கவும், பட்டாசுகள் வெடித்தும் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். திரையரங்குகளின் நுழைவு வாயில்களில் நடிகர் அஜித் குமாரின் பிரமாண்ட கட்-அவுட்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. திரைப்படம் தொடங்கியதும் திரையரங்குகளில் ஆரவாரமான சூழ்நிலை நிலவியது. ரசிகர்கள் அஜித் குமாரின் அதிரடி சண்டைக் காட்சிகளுக்கும், நகைச்சுவைக் காட்சிகளுக்கும் விசில் அடித்தும், கை தட்டியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இப்படத்தில் நடித்துள்ள த்ரிஷா கிருஷ்ணன், பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில், ராகுல் தேவ், யோகி பாபு, ஷைன் டாம் சாக்கோ, ஜாக்கி ஷெராப், ப்ரியா பிரகாஷ் வாரியர், ரகு ராம் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களின் நடிப்புக்கும் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Next Story

