கோவை: வெள்ளி வேல் திருடிய போலி சாமியார் கைது !

X
கோவை, மருதமலை அடிவாரத்தில் உள்ள தனியார் மடத்தில் இருந்து 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி வேலை திருடிய 57 வயது சாமியார் வெங்கடேஷ் சர்மா நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மருதமலை கோவில் அடிவாரத்தில் வேல் கோட்டம் என்ற தனியாருக்கு சொந்தமான மடம் உள்ளது. இங்கு இரண்டரை அடி உயரமுள்ள வெள்ளி வேல் ஒன்று பொது மக்கள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருந்தது. இதன் மதிப்பு சுமார் 4 லட்சம் ரூபாய் ஆகும். கடந்த வாரம் மருதமலை கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றதை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு திரண்டிருந்தனர். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி, சாமியார் வேடத்தில் வந்த ஒரு மர்ம நபர் வேல் கோட்டம் மடத்தில் இருந்து வெள்ளி வேலை திருடிச் சென்றுவிட்டார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து தலைமறைவாக இருந்த வெங்கடேஷ் சர்மாவை தீவிரமாக தேடி வந்த வடவள்ளி போலீசார் அவரை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

