அன்னதானத்தை தொடங்கி வைத்த மாவட்ட செயலாளர்

மதுரை திருமங்கலம் அருகே நடந்த அன்னதானம் விழாவை மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் தொடங்கி வைத்தார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வில்லூர் அருள்மிகு ஸ்ரீ சங்கிலி கருப்பசாமி, அன்னை ஸ்ரீ பராசக்தி காளியம்மன் திருக்கோவில் 2025 ஆம் ஆண்டு பங்குனித் திருவிழாவை முன்னிட்டு வில்லூர் பொதுமக்கள் சார்பாக இன்று (ஏப்.11) நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியை திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் தொடங்கி வைத்து கலந்து கொண்டார். இந்நிகழ்வில் கள்ளிக்குடி ஒன்றிய திமுக நிர்வாகிகள், வில்லூர் கிளைக் கழகங்களின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Next Story