மகாகவி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறு சேமிப்பு

மகாகவி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறு சேமிப்பு
மகாகவி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறு சேமிப்பு &சிறு குறு கடனுதவி, சுயதொழில் &சுயம்வரம் ஒருங்கிணைந்த திட்ட அலுவலகம் திறப்பு. கரூர் மாவட்டம், மகாகவி மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு நலச்சங்கம், சார்பில், மாவட்ட தலைவர், கந்தசாமி தலைமையில், நூறு கிராமங்களை உள்ளடக்கி மகாகவி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறு சேமிப்பு &சிறு குறு கடனுதவி, சுயதொழில் &சுயம்வரம் ஒருங்கிணைந்த திட்ட அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் சமூக நீதி இயக்கத்தின் மாநில பொருளாளர் தமிழரசி திறந்து பஞ்சபட்டியில் வைத்தார். இந்நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கிருஷ்ணராயபுரம் ஒன்றிய கிழக்கு மாவட்ட செயலாளர் பொறியாளர் வைர பெருமாள்,அ.தி.மு.க பேரூர் கழக நகர பொருளாளர் வீரமணி, திராவிட கழக பேரூர் கழக செயலாளர் கவிகண்ணன்,சமூக ஆர்வலர் மாணிக்கம், பஞ்சப்பட்டி தனபால் என பலர் கலந்து கொண்டு, வாழ்த்துரை வழங்கினர். மகாகவி மாவட்ட செயலாளர் சகாளிதாஸ், பேரூர் கழக செயலாளர், கோவிந்தராஜ், மகாகவி நிர்வாக மேலாளர் தமிழ்செல்வி, சாகுல் ஹமீது, மக்கள் தொடர்பாளர்,கோமதி , புஷ்பவள்ளி, என்று மகாகவி மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள்,பேரூர் கழக நிர்வாகிகள், ஊராட்சி நிர்வாகிகள் என நூறுக்கும் மேற்பட்ட மகாகவி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்,
Next Story