ராமநாதபுரம் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது

அன்னதானத்தின் போது இஸ்லாமியர்கள் முருக பக்தர்களுக்கு உணவு பரிமாறினர். மத நல்லிணகத்திற்கு எடுத்து விளங்கியது
முருகப்பெருமானின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான பங்குனி உத்திரத் திருவிழா தென்மாவட்டங்களில் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கானோர் பங்குனி உத்தர திருவிழாவையொட்டி கடந்த வாரம் காப்பு கட்டி தங்களது நேர்த்தி கடனை இன்று காலை முதல் செலுத்தி வருகின்றன. இதனால் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், குயவன்குடி,ராமநாதபுரம், கமுதி முதுகுளத்தூர்,பரமக்குடி திருவாடானை என மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள முக்கிய முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்ட நெரிசலாக காணப்படுவதுடன் பக்தர்கள் காவடி எடுத்தும் அழகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் ஸ்ரீ வழிவிடு முருகன் கோவில் ஆலய பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பாசி பட்டறை தெரு முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலுக்கு பாத்தியப்பட்ட மீன் மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் இஸ்லாமியர்கள் இணைந்து ராமநாதபுரம் முருகன் கோயிலில் அன்னதானம் வழங்கினர். அன்னதானத்தின் போது இஸ்லாமியர்கள் முருக பக்தர்களுக்கு உணவு பரிமாறினர். மத நல்லிணகத்திற்கு எடுத்து காட்டாக அதனை பெற ற இந்த அன்னதானம் பொது மக்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது
Next Story