ராமநாதபுரம் காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு போட்டி நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை - பொதுமக்களிடையே நல்லுணர்வை ஏற்படுத்தும் வகையில் மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்று மதியம் தொடங்கியது. ஆயுதப்படை மைதானத்தில் தொடங்கிய கிரிக்கெட் போட்டியை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் டாஸ் போட்டு தொடங்கி வைத்தார். முதல் போட்டியில் காவல் கண்காணிப்பாளர் அதிவிரைவுப்படை அணிக்கும் ஊர்காவல் படை அணியினருக்கும் இடையே போட்டி நடைபெற்றது. ஊர்காவல் படை அணியினர் பவுலிங் தேர்வு செய்தநிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் பேட்டிங் செய்தார். பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் இடையே நல்லுறவு மேம்பட வேண்டும் அதற்காக கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே நல்லுறவு ஏற்பட்டால் குற்ற செயல்களை எளிதில் தடுக்க முடியும். 36 அணிகள் சுமார் 600 பேர் கலந்து கொள்க இருப்பதாகவும், இந்த தொடர் கிரிக்கெட் போட்டிகள் இன்று முதல் பத்து நாட்கள் நடைபெறும், போட்டியின் முடிவில் சிறப்பாக விளையாடிய அணிக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். இதில் வழக்கறிஞர்கள், வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினர் துறையைச் சேர்ந்தவர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு விளையாட உள்ளதாக மாவட்ட காவல்த்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story




