ராமநாதபுரம் மார்க்ரெட்என்ற பெயரில் ஏஐ ஆசிரியரை கற்பித்தல் பணிக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தனியார் பள்ளி ஒன்றில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத் திறனை பயன்படுத்தி மார்க்ரெட்என்ற பெயரில் ஏஐ ஆசிரியரை கற்பித்தல் பணிக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்மாவட்டம்ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத் திறனை பயன்படுத்தி ‘மார்க்ரெட்' என்ற பெயரில் ஏஐ ஆசிரியரை கற்பித்தல் பணிக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் தற்போது செயற்கை நுண்ணறிவு எனும் ஏ.ஐ தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த தொழில்நுட்பம் மூலம் மனிதர்கள் செய்யும் பணிகளைச் செய்ய வைக்க முடிகிறது. ஏ.ஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் ரோபோக்கள் மனிதர்களை போல சிந்திக்கவும், பகுப்பாய்வு செய்யவும் முடிகிறது. அந்த வகையில் தற்போது செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கக்கூடிய ‘மார்க்ரெட்' என்று பெயரிடப்பட்ட ஏஐ ஆசிரியரை ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் பள்ளியில் கற்பித்தல் பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிமுக நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. ரோபோ வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த ஏஐ ஆசிரியை பள்ளி மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சர்ச் என்ஜின் உதவியுடன் பதில் அளிக்கிறது. 25 இந்திய மொழிகள், 25 சர்வதேச மொழிகளில் பேசமுடியும். அதோடு மாணவர்களுடன் கைகொடுத்து உரையாடுவது குறிப்பிடத்தக்கது.
Next Story