அனைத்து ஜமாத்தார்கள் ஆர்ப்பாட்டம்.

அனைத்து ஜமாத்தார்கள் ஆர்ப்பாட்டம்.
X
மதுரை வில்லாபுரத்தில் மத்திய அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மதுரையில் உள்ள அனைத்து பள்ளிவாசல் ஜமாத்தார்கள் சார்பாக இன்று( ஏப்.11)மதியம் வில்லாபுரத்தில் மத்திய அரசு நிறைவேற்றிய வக்பு சட்டத்தை எதிர்த்தும் அதனை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் மற்றும் பெண்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகி அருணன், துணை மேயர் நாகராஜன் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பலர் பேசினார்கள்.
Next Story