மாலா கோவில் திருவிழா அழைப்பிதழ் கொடுக்கும் பணி தீவிரம்

X
Komarapalayam King 24x7 |11 April 2025 2:39 PM ISTகுமாரபாளையத்தில் மாலா கோவில் திருவிழா அழைப்பிதழ் கொடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையம், வேளாங்காடு பகுதியில் ஒரு சமுதாயத்தினர், அவர்களது குடும்பங்களை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட இறந்தவர்கள் நினைவாக, மற்றொரு சமுதாய நபர் ஒருவரின் பட்டா நிலத்தில் நினைவுக்கல் வைத்து, பாலா கோவில் என்ற கோவில் அமைத்து வழிபட்டு வந்தனர். இதற்கு நில உரிமையாளர் மற்றும் அவரது சமுதாயத்தினர், கல் வைத்த நபர்களிடம் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். நட்டு வைத்த நினைவு கற்களை அகற்றுமாறு போலீசில் புகார் கொடுத்து, அந்த பிரச்னை தீராத நிலையில், மீண்டும் அதே இடத்தில் நினைவுக்கல் வைத்து வழிபடுகிறோம் என்று கூறி, 75க்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். இதற்கு நில உரிமையாளர் உள்ளிட்ட, நில உரிமையாளரின் சமுதாய மக்கள் பலரும் திரண்டதால், மோதல் சூழல் ஏற்பட்டது. இது சம்பந்தமாக திருச்செங்கோடு ஆர்.டி.ஒ. அலுவலகத்தில், ஆர்.டி.ஓ. சுகந்தி தலைமையில் சில நாட்கள் முன்பு நடந்த நான்காம் கட்ட பேச்சுவார்த்தையில் சுமுக தேர்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் கூறினர். ஆனால் இடம் ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் வசம் ஒரு தரப்பினர் தங்கள் ஆட்சேபனையை தெரிவித்தனர். நேற்று மீண்டும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுக்கு நில அளவீடு செய்து, அவர்கள் கேட்டபடி வழங்கப்பட்டது. இது குறித்து விவசாயி விஸ்வநாதன் கூறியதாவது: எங்கள் பகுதியில் ஒரு சமுதாயத்தினர், இறந்தவர்கள் நினைவாக நடுகல் வைத்து வழிபடுவது வழக்கம். இந்த இடத்திற்கு பாலா கோவில் என பெயர். இதற்காக இடம் கேட்டு, மாவட்ட கலெக்டர் உத்திரவின் பேரில், ஆர்.டி.ஒ., தாசில்தார், இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆறு கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு பின் இந்த விவகாரத்தில் சுமுக முடிவு ஏற்பட்டது. இவர்களுக்காக இடம் ஒதுக்கப்பட்டது. இந்த இடத்தில் ஏப். 16, புதன்கிழமை நாளில் பாலா கோவில் திருவிழா நடத்த உள்ளதாக, பொதுமக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
