வாகன விபத்தில் வாலிபர் பலி

X
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கோட்டநத்தம்பட்டி சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த நாகராஜனின் மகன் பாஸ்கரன் (24) என்பவர் நேற்று முன்தினம் (ஏப்.9) மேலூர் அருகே உள்ள வெள்ளலூரைச் சேர்ந்த விஷாலுடன் இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார். வெள்ளலூர்-உறங்கான்பட்டி சாலையில் சென்ற போது, இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலை மையத் தடுப்பில் மோதியதில் வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த பாஸ்க ரன் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்தார்.இதை பார்த்த அப் பகுதி மக்கள் அவரை மீட்டு, மதுரை அரசு மருத் துவமனையில் சேர்த்தனர். அங்கு பாஸ்கரன் சிகிச்சை பலனின்றி நேற்று (ஏப்.10) உயிரிழந்தார். இது குறித்து கீழவளவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வரு கின்றனர்
Next Story

