சாலையில் தேங்கும் மழை மற்றும் கழிவு நீரால் பொதுமக்கள் அவதி

சாலையில் தேங்கும் மழை மற்றும் கழிவு நீரால் பொதுமக்கள் அவதி
X
பொதுமக்கள்
தேனி மாவட்டம், அம்மச்சியாபுரம் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரக்கூடிய நிலையில் அப்பகுதியில் மழைநீர் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள வடிகால் வசதி உரிய முறையில் அமைக்கப்படாததால் மழை காலங்களில் மழைநீர் ஆங்காங்கே தெருக்களில் தேங்குகின்றன. இதனால் அவ்வழியாக செல்லக்கூடிய பொதுமக்கள் மற்றும் பள்ளிகள் வந்து சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Next Story