உம்பளச்சேரி சிறை மீட்ட அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா

X
நாகை மாவட்டம் தலைஞாயிறை அடுத்த உம்பளச்சேரியில், சிறை மீட்ட அய்யனார் கோயில் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோயிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. தொடர்ந்து, பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அய்யனாருக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர், யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் பிரகாரமாக எடுத்து சென்று அய்யனாருக்கு மகா அபிஷேகம் செய்தனர். பின்னர், பூர்ணா, புஷ்கலாபிகா, சிறை மீட்ட அய்யனாருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை காண்ப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அய்யனார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story

