கரூரில் வக்பு வாரிய சட்ட மசோதாவை கிழித்தெறிந்து ஆர்ப்பாட்டம்.
கரூரில் வக்பு வாரிய சட்ட மசோதாவை கிழித்தெறிந்து ஆர்ப்பாட்டம். கரூர்- கோவை சாலையில் உள்ள ஈத் கா மசூதி முன்பு மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில், வக்பு வாரிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் ஷேக் இஸ்மாயில் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் உவைஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் 15 க்கும் மேற்பட்டோர் கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது, இஸ்லாமியருக்கு எதிரான வக்ப்பு வாரிய சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் வக்பு வாரிய சட்ட மசோதா நகலை கிழித்தெறிந்து மீண்டும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.
Next Story





