ஓடும் ஆம்புலன்ஸில் பிறந்தது ஆண் குழந்தை.

ஓடும் ஆம்புலன்ஸில் பிறந்தது ஆண் குழந்தை.
X
மதுரை அருகே ஓடும் ஆம்புலன்சில் ஆண் குழந்தை பிறந்தது.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி அபிராமி(25)க்கு முதலில் ஒரு குழந்தை உள்ள நிலையில் இரண்டாவதாக கர்ப்பமானார். இதனை தொடர்ந்து பிரசவத்திற்காக தாய் வீடான மேலூர் அருகே உள்ள கொட்டகுடிக்கு அபிராமி சென்றார். நேற்று முன்தினம் இரவு (ஏப்.11)திடீரென அபிராமிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸை அழைத்து மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே அவருக்கு பிரசவ வலி அதிகமானதால் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர் விமல் அபிராமிக்கு பிரசவம் பார்த்துள்ளார். பிரசவத்தில் ஆம்புலன்சிலேயே ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமுடன் மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Next Story