செல்ரபாளையம்- கணவன் மனைவி குடும்ப தகராறு. தூக்கிட்டு தற்கொலை செய்த கணவன்.

செல்ரபாளையம்- கணவன் மனைவி குடும்ப தகராறு. தூக்கிட்டு தற்கொலை செய்த கணவன்.
செல்ரபாளையம்- கணவன் மனைவி குடும்ப தகராறு. தூக்கிட்டு தற்கொலை செய்த கணவன். கரூர் மாவட்டம், ஆத்தூர் செல்ரபாளையம், ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் சோழியப்பன் மகன் சூர்யா வயது 24. இவர் கடந்த 4- வருடங்களுக்கு முன்பு சரண்யா என்ற கைம்பெண்ணை திருமணம் முடித்தார். திருமணம் நடந்தபோது சரண்யாவுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருந்தது. திருமணத்திற்கு பிறகு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதனிடையே கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. மீண்டும் இவர்களிடையே ஏப்ரல் 9-ம் தேதி மாலை 4 மணியளவில் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சூர்யா தான் குடியிருந்த வாடகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அறிந்த சூர்யாவின் தாயார் கோமதி வயது 40 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த சூர்யாவின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வாங்கல் காவல்துறையினர்.
Next Story