திருவள்ளூர் வடக்கு மாவட்ட பாமக செயலாளர் : மருத்துவர் ராமதாசுக்கு எதிராக போர் கொடி
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் டாக்டர் ராமதாஸிற்கு எதிராக எழுந்துள்ள முதல் போர்க்கொடி மீண்டும் அன்புமணி ராமதாஸ் தலைவராக நியமிக்க வேண்டும் என திருவள்ளூர் பாட்டாளி மக்கள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் வி எம் பிரகாஷ் பேட்டி சமூக வலைதளங்களிலும் எதிர்ப்பை பதிவு செய்து அன்புமணிக்கு மீண்டும் பதவி வழங்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது/ மருத்துவர் ராமதாசுக்கு எதிராக போர் கொடி தூக்கி உள்ள திருவள்ளூர் வடக்கு மாவட்ட பாமக செயலாளர் அன்புமணி ராமதாசை மீண்டும் தலைவராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி பேட்டி பாமக தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ் அவர்களை நீக்கியது அதிர்ச்சி அளிக்கிறது மீண்டும் அவரை தலைவராக நியமித்து டாக்டர் ராமதாஸ் கட்சி பணியை திறம்பட செயல்பட வைப்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சென்னை பனையூரில் கடந்த வாரம் ஏப்ரல் ஒன்றாம் தேதி மற்றும் இரண்டாம் தேதி ஆகிய இரண்டு நாட்களாக நடைபெற்ற பாமக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் கட்சியினர் வன்னியர் சங்க நிர்வாகிகள் மாவட்டச் செயலாளர்கள் என திரளாக பங்கேற்றனர். அனைவரையும் காலை முதல் இரவு வரை நடைபெற்ற கூட்டத்தில் சந்தித்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக இருந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்துரையாடினார் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எதிர்கொண்டு வெற்றி பெறுவது குறித்தும் கூட்டணி விவரங்கள் குறித்தும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்தும் ஆலோசித்தார் இதில் குறிப்பாக சட்டமன்ற உறுப்பினர்கள் திருப்பத்தூர் ராஜா மயிலம் சிவகுமார், சேலம் அருள் மேட்டூர் சதாசிவம் தர்மபுரி வெங்கடேஷ்வரன் வழக்கறிஞர் பாலு மாநில இளைஞர் சங்க துணைச் செயலாளர் பால யோகி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பாமக மாவட்ட செயலாளர்கள் 117 பேர் என கலந்து கொண்டனர் இந்த நிலையில் பாமக தலைவராக இருந்த டாக்டர் அன்புமணி ராமதாஸின் பதவியை அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இனி தலைவர் பதவியை தானே தொடர்வதாகவும் செயல் தலைவராக அன்புமணி ராமதாஸ் செயல்படுவார் என்று அறிவித்துள்ளது கட்சியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது ஏற்கனவே கட்சி தலைமைக்கு இளைஞர் தான் வரவேண்டும் என்று அறிவித்து அறிமுகம் செய்த மருத்துவர் ராமதாஸ் அவர்களே இப்படி மீண்டும் பதவியை எடுத்துக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் மீண்டும் அன்புமணி ராமதாஸ் அவர்களின் பதவியை தொடர வழிவதை செய்வார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர் இதனிடையே தமிழகத்திலேயே முதல் மாவட்ட செயலாளர் ஆக திருவள்ளூர் வடக்கு மாவட்ட பாமக செயலாளர் வி எம் பிரகாஷ் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
Next Story



