எஸ் பி தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி

X
இன்று சமத்துவ நாள் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு இன்று 11.04.2025-ந் தேதி காலை 11.00 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி, தலைமையில் ''சமத்துவ நாள் உறுதிமொழி'' ஏற்கப்பட்டது உறுதிமொதி – சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி, ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளில், சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சகமனிதர்களைச் சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமார உறுதி கூறுகிறேன் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வளர் சக்தி, உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் காவல் அலுவலக அமைச்சு பணியாளர்கள் கலந்துகொண்டு சமத்துவ நாள் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
Next Story

