அண்ணாமலையின் சேவை நிச்சயமாக தொடரும் : அர்ஜுன் சம்பத்

அண்ணாமலையின் சேவை நிச்சயமாக தொடரும் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் ஒரு திருப்புமுனையாக அமையும் காமராஜரின் நல்லாட்சி அமையும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்
அண்ணாமலையின் சேவை நிச்சயமாக தொடரும் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் ஒரு திருப்புமுனையாக அமையும் காமராஜரின் நல்லாட்சி அமையும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார் சனாதன எதிர்ப்பு மாநாடு நடத்தும் திருமாவளவன் தான் அவரை மாற்றிக் கொள்ள வேண்டும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் திருவள்ளூர் மாவட்டம் ஆண்டார்குப்பம் அருகே சென்னிவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மரகதாம்பிகை கல்யாண வீரபத்ர சுவாமிகள் ஆலயத்தில் நவபாசன வராகி சக்தி பீடம் கலியுக வராகி சித்தர் தலைமையில் உலக நன்மைக்காக 48 நாள் மகா மண்டல யாக வேள்வி கடந்த 18 ஆம் தேதி மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது உலக மக்கள் நலனுக்காகவும் இயற்கை அழிவுகள் பேரழிவுகளை தடுக்கவும் 1008 மூலிகைகளால் 48 நாட்கள் மகா மண்டல யாக வேள்வி வராகி அம்மனுக்கு நடைபெற்று வரும் மகா சண்டியாகத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஆலயங்களில் நிர்வாகங்கள் அரசியல் கட்சிகள் மற்றும் அரசாங்கத்தின் பிடியில் உள்ளது என்றும் மத்திய மாநில அரசுகள் இந்து கோயில்களை இந்துக்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும் ஏழை முஸ்லிம்கள் பயனடையும் வகையில் வஃக்பு திருத்த சட்டத்தை மோடி கொண்டு வந்துள்ளார் அனைத்து முஸ்லிம்களும் இதனை வரவேற்கின்றனர் அரசியல்வாதிகளை தவிர முஸ்லிம்கள் இனிப்பு வழங்கி கொண்டாடுகின்றனர் அரசியல் காரணத்திற்காக சிலர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் இந்துக்கள் சொத்துக்கள் இந்துக்கள் வசமே ஒப்படைக்க வேண்டும் என்றும் சர்ச்சுகள் மசூதிகள் போன்று புதிய கோவில்கள் அதிக அளவில் கட்ட வேண்டும் இருக்கின்ற கோவில்கள் சரியாக பராமரிக்க்கப்படுவதில்லை என்றும் இந்து மாணவர்களுக்கு இந்து கல்வி கொடுக்க வேண்டும் முஸ்லிம்களுக்கு மதராஸா கல்வி உள்ளது போன்று கிறிஸ்தவர்களுக்கு பைபிள் கல்வி உள்ளது போன்று சமயக் கல்வி கொடுக்கப்பட வேண்டும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு எம் ஜி ஆர் ஜெயலலிதா பக்தராக இருந்தார் தற்போது கலைஞர் பக்தராக மாறி விட்டார் கும்பாபிஷேக விழாக்கள் கட்சி விழா போன்று நடைபெறுகிறது கோவில் வழிபாட்டில் விஐபி கலாச்சாரத்தால் பக்தர்கள் பாதிக்கப்படுகிறார்கள் இதையெல்லாம் ஒழித்து கட்ட வேண்டும் என்பதே தங்களின் கோரிக்கை என்றும் திருமாவளவன் இந்து கோவில் கோபுரங்களை அசிங்கமாக பேசிக் கொண்டிருந்தார் வஃக்பு சட்ட திருத்த மசோதா எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இந்துக்களை மனம் புண்படும்படி கோஷம் எழுப்பாதீர்கள் என அவர் கூறுகிறார் அதை அவர் முதலில் பின்பற்ற வேண்டும் சனாதன ஒழிப்பு மாநாடு எதிர்ப்பு மாநாடு நடத்தும் திருமாவளவன் தான் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி டாக்டர் ராமதாஸால் உருவாக்கப்பட்டது அன்புமணி அதனை நடத்தி கொண்டிருக்கிறார்கள் தற்போது ஏற்பட்ட பிரச்சனை அவர்கள் கட்சி விவகாரம் பேசி தீர்த்துக் கொள்வார்கள் சைதை துரைசாமி அதிமுக ஒன்றிணைந்து பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று கூறிய கருத்து வரவேற்கத்தக்கது என்றும் சீக்கிரம் நல்ல காரியம் நடக்க வேண்டும் தலைவர் அமித்ஷா வருகிறார் எல்லாவற்றையும் பேசி சரி செய்து ஒற்றுமைப்படுத்தி தமிழகத்தில் காமராஜர் ஆட்சி வரவேண்டும் தமிழ்நாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் அமித்ஷா வருகிறார் எல்லா கட்சித் தலைவர்களை அவர் சந்திக்க உள்ளார் அது தமிழகத்தில் ஒருதிருப்புமுனையாக அமையும் என்றும் பாஜக என்பது அத்வானி வாஜ்பாய் மோடியின் கட்சி அல்ல தனிநபர் துதி இங்கு கிடையாது பாரத் மாதாவுக்கு ஜே மட்டுமே இங்கு இருக்கும் பாஜகவிற்கு யார் தலைவராக வந்தாலும் கட்சியை சிறப்பாக நடத்துவார்கள் பாஜகவிற்கு அற்புதமான தலைவராக அண்ணாமலை உள்ளார் அவரை அனைத்து மக்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர் அவருடைய சேவை நிச்சயமாக தொடரும் பாஜகவில் யார் தலைவராக வந்தாலும் சேவை சிறப்பாக நடக்கும் என தெரிவித்தார்.
Next Story