கீழ விடங்களூர் அகத்தீஸ்வரர் சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா
நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் கீழ விடங்களூர் சத்யாயதாஷி உடனுறை அகஸ்தீஸ்வர சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா, விநாயகர் பூஜையுடன் நேற்று முன்தினம் தொடங்கியது. இரண்டு கால யாக பூஜை நிறைவு பெற்று, நேற்று கடம் புறப்பாடு நடைபெற்றது. மேள தாளங்கள் முழங்க, கடத்தில் அடங்கிய புனித நீர் கொண்டு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, மூலவர் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருப்பணிகளை, பிரேமா சூரிய நாராயணன், சூரிய நாராயண சர்மா, வெங்கடேசன் ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story




