எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு

எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு
X
முத்தங்கி அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி
நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தீர்த்தவாரி மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும் இக்கோயிலில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, கோயில் முன் அமைந்துள்ள குளத்தில் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, முத்தங்கி அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து, பக்தர்கள் கொண்டு வந்த பாலில் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து இரவு, வெள்ளி மயில் வாகனத்தில் முருகப்பெருமான் வீதியுலா காட்சி நடைபெற்றது.
Next Story