திருத்தணி முருகன் கோவிலில் பங்குனி உத்திரம் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
திருத்தணி முருகன் கோவிலில் பங்குனி உத்திரம் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம். முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் இன்று பங்குனி உத்திரம் விழாவை முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. விழாவையொட்டி விடியற்காலை மூன்று மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது. இதில் சென்னை காஞ்சிபுரம் வேலூர் ராணிப்பேட்டை திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்தும் பெண்கள் தீபம் ஏற்றியும் மாட வீதியை சுற்றி நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். மேலும் சரவணப் பொய்கை திருக்குளத்தில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து பின்னர் காவடி மண்டபத்தில் பக்தர்கள் முன்னிலையில் முருகப்பெருமானுக்கு பாலபிஷேகம் நடைபெற உள்ளது. விழாவையொட்டி பக்தர்கள் தடையின்றி சாமி தரிசனம் செய்ய சிறப்பான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் செய்யப்பட்டுள்ளது மேலும் காவல் துணை கண்காணிப்பாளர் கந்தன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்...
Next Story





