வாணியம்பாடியுள் இரு சக்கர வாகனம் தீ பற்றி எரிந்து சேதம்

X
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆசிரியர் நகர் பகுதியில் மின்சார இருசக்கர வாகனத்தில் திடீர் தீ விபத்து. விபத்தால் மின்சார இரு சக்கர வாகனம் தீ பற்றி எரிந்து நாசம். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆசிரியர் நகர் பகுதியில் வசித்து வருபவர் மதுரை முனீர் அஹமத். இவர் இன்று மதியம் தன்னுடைய மின்சார இரு சக்கர வாகனத்தை சார்ஜில் போட்டுவிட்டு வீட்டுக்குள் சென்று இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சார வாகத்தில் மின் கசிவு காரணமாக தீப்பற்றி எறிய தொடங்கியது. வீட்டிலிருந்து அதிகளவு கரும்புகை வந்ததால் அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று வீட்டின் கதவை தட்டி உள்ளனர். அப்போது கதவை திறந்தவுடன் உள்ளே சென்று பார்த்தபோது மின்சார இரு சக்கர வாகனம் சார்ஜில் போடப்பட்டு இருந்ததும், இதன் காரணமாக மின் கசிவு ஏற்பட்டு மின்சார இருசக்கர வாகனத்தில் தீ பற்றி எரிந்து கொண்டு இருந்ததை தெரிய வந்தது. உடனடியாக வீட்டின் உரிமையாளர் மற்றும் அக்கம் பக்கத்தினர் மின் இணைப்பு துண்டித்து பின்னர் தண்ணீர் கொண்டு தீயை அணைத்தனர். இருப்பினும் மின்சார இரு சக்கர வாகனம் தீ பற்றி நாசமானது. அக்கம் பக்கத்தினர் விரைந்து செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Next Story

