தமிழக ஆளுநர் மதுரை வருகை.

தமிழக ஆளுநர் மதுரை வருகை.
X
மதுரைக்கு நாளை தமிழக ஆளுநர் வருகை தரவுள்ளார்.
சென்னையில் இருந்து நாளை (ஏப்.12)காலை விமான மூலம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் மதுரை வருகிறார். இவர் மதுரை விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்பு மதியம் மீண்டும் மதுரை வந்து நான்கு வழிச்சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்குகிறார். அதன்பிறகு 3 மணி அளவில் திருப்பரங்குன்றத்தில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொள்கிறார். அதன் பின்பு மாலை விமானம் மூலம் சென்னை செல்கிறார். தமிழக ஆளுநர் மதுரை வருகையை முன்னிட்டு ஆளுநர் செல்லும் வழியில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
Next Story