வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து பூந்தமல்லியில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து பூந்தமல்லியில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்
வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து பூந்தமல்லியில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் வக்பு திருத்த சட்டத்தை மக்களவையில் நிறைவேற்றி இஸ்லாமிய சொத்துக்களை அபகரிக்க துடிக்கும் பாஜக அரசை கண்டித்து பூந்தமல்லி வட்டார ஒருங்கிணைந்த ஜமாத் சார்பாக பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடி பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பூந்தமல்லி பள்ளிவாசல் தலைவர் முகமது அனிப் கவுஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பினார்கள். மேலும் வக்பு திருத்த சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பினர். தொழுகையை முடித்துவிட்டு 300 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் நேரடியாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கன்டன கோசங்களை எழுப்பினார்கள். அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Next Story