பாமகவில் கோஷ்டி மோதல் அமைச்சர் நாசர் விமர்சனம்

பாமகவில் கோஷ்டி மோதல் அமைச்சர் நாசர் விமர்சனம்
பாமகவில் கோஷ்டி மோதல் அமைச்சர் நாசர் விமர்சனம். அதிமுக,பாமக போல் இல்லாமல் அண்ணன்,தம்பி உள்ள கட்சி திமுக திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 19 ஆம் தேதி பல்வேறு நலத்திடங்களை துவக்கி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவுள்ளார்.இது குறித்த ஆலோசனை கூட்டம் பூவிருந்தவல்லியில் நடைபெற்றது.நகரச் செயலர் திருமலை தலைமையில் அமைச்சர்.சா.மு.நாசர் கலந்து கொண்டார். அப்போது பேசிய அமைச்சர் நாசர் ஒரே நேரத்தில் 1.25 லட்சம் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் மாபெரும் நிகழ்ச்சி முதன்முறையாக நடைபெற உள்ளது இதனை திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு வெற்றி அடைய செய்ய வேண்டும் என்றார் மேலும் எந்த பணியாக இருந்தாலும் திருவள்ளூர் மாவட்ட திமுக சிறப்பாக செயல்பட்டு செய்து முடித்துக் காட்டும் என தலைவருக்கு நம்பிக்கை உள்ள மாவட்டமா விளங்குகிறது அந்த வகையில் கடந்த தேர்தலில் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பத்து தொகுதியும் ஜெயித்து காட்டினும் அதே போல் உள்ளாட்சித் தேர்தலிலும் மேயர், நகர் மன்றம் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலும் திமுக வெற்றி பெற்றது மேலும் இருமுறை காங்கிரஸ் வேட்பாளராக இருந்தாலும் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பாக கடமை முறை நடைபெற்ற தேர்தலில் 5.78 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று தமிழகத்தில் அதிக வாக்குகள் பெற்ற தொகுதியாக திருவள்ளூர் விளங்கியது ..இன்னும் கூட திமுக வேட்பாளர் நிறுத்திருந்தால் உள்துறை அமைச்சர் அமித்ஷா பெற்ற வாக்கை விட அதிக வாக்கு பெற்று இந்தியாவிலேயே முதல் தொகுதியாக விளங்கி இருக்கும் என கூறினார்.. பிற கட்சி போல் கட்சிக்குள்ளே அடித்து கொள்ளும் கட்சி திமுக கிடையாது அதிமுக தற்போது கூட பாமக பாஜக போன்ற கட்சிகளிலும் கோஷ்டி மோதல் உள்ளது திமுகவில் உள்ளவர்கள் அண்ணன் தம்பி போல் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டு வருகிறோம் என பெருமிதம் தெரிவித்தார்..
Next Story