மதுரை பைபாஸ் சாலையில் இயற்கை அழைப்புக்கு ஒதுங்கிய லாரி டிரைவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த இருவர் கைது.

மதுரை பைபாஸ் சாலையில் இயற்கை அழைப்புக்கு ஒதுங்கிய லாரி டிரைவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த இருவர் கைது.
மதுரை பைபாஸ் சாலையில் இயற்கை அழைப்புக்கு ஒதுங்கிய லாரி டிரைவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த இருவர் கைது. சேலம் மாவட்டம், ஓமலூர், கள்ளிக்காடு, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா வயது 54. இவர் லாரி டிரைவர். இவர் தனக்கு சொந்தமான லாரியில் ஏப்ரல் 10-ம் தேதி நள்ளிரவு 1:30 மணி அளவில், சுண்ணாம்புக்கல் லோடு ஏற்றிக்கொண்டு சேலம்- திண்டுக்கல் சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது கரூர் அருகே மதுரை பைபாஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் அருகே லாரியை நிறுத்திவிட்டு இயற்கை அழைப்புக்காக சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, வளையல் காரன் புதூர் பகுதியைச் சேர்ந்த தீபக் வயது 22, வீரராக்கியம், காமராஜர் நகரை சேர்ந்த சதீஷ்குமார் வயது 21 ஆகிய இருவரும் ராஜாவிடம் சென்று கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 500 பறித்தனர். அப்போது ராஜா கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் தீபக் மற்றும் சதீஷ்குமார் ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை ஏப்ரல் 23ஆம் தேதி வரை சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் மாநகர காவல் துறையினர்.
Next Story