கிணற்றுக்குள் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்பு

X
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள அருப்பம்பட்டியை சேர்ந்தவர் பாண்டி, விவசாயி. இவர் தனது வீட்டில் பசுக்களை வைத்து வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை பாண்டி வளர்த்து வந்த பசு ஒன்று அதே பகுதியை உள்ள ராசு என்பவருக்கு சொந்தமான கிணற்றின் அருகே மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென நிலை தடுமாறி பசு 40 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்தது. கிணற்றில் 10 அடி உயரத்திற்கு தண்ணீர் இருந்ததால், பசு தண்ணீரில் தத்தளித்தபடியே அலறியுள்ளது. பசுவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி சென்று பார்த்தபோது பசு கிணற்றுக்குள் தவறி விழுந்தது தெரியவந்தது. இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி கயிறு கட்டி பசுவை உயிருடன் மீட்டனர். அதனைத்தொடர்ந்து பசு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story

