வக்பு மசோதாவிற்கு கண்டனம் கோஷங்கள் எழுப்பி இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

வக்பு மசோதாவிற்கு கண்டனம் கோஷங்கள் எழுப்பி  இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்
X
திண்டுக்கல்லில் அனைத்து பள்ளிவாசல்கள் முன்பாக கருப்பு பேட்ஜ் அணிந்து கையில் பதாதைகளுடன் வக்பு மசோதாவிற்கு கண்டனம் கோஷங்கள் எழுப்பி இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கலில் பேகம்பூர் பெரிய பள்ளிவாசல், முகமதியா புரம் பள்ளிவாசல், மதினா பள்ளிவாசல், மண்டி பள்ளிவாசல், நாகல் நகர் ஜும்மா பள்ளிவாசல் உள்ளிட்ட நகரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களின் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையின் போது, தொழுகையில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். தொழுகை முடிந்து பள்ளிவாசல் முன்பு கையில் பதாதைகளுடன், மத்திய அரசின் வக்பு மசோதாவிற்கு கண்டனம் தெரிவித்து வக்பு சட்ட திருத்தத்தை திரும்ப பெரும் வரை போராட்டம் ஓயாது என திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Next Story