கீழ் மேட்டூர் கதவணையில் வருடாந்திர பராமரிப்பு பணி: ராசிபுரம் நகராட்சி மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த நகரமன்ற தலைவர் கவிதாசங்கர் வேண்டுகோள்...

X
Rasipuram King 24x7 |11 April 2025 7:39 PM ISTகீழ் மேட்டூர் கதவணையில் வருடாந்திர பராமரிப்பு பணி: ராசிபுரம் நகராட்சி மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த நகரமன்ற தலைவர் கவிதாசங்கர் வேண்டுகோள்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சிக்கு கூட்டுக்குடிநீர் திட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கோடை காலத்தை முன்னிட்டு குடிநீர் வழங்கும் கீழ் மேட்டூர் கதவணையில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் இன்று முதல் (11ம் தேதி) வரும் 25ம் தேதி வரை நகராட்சிக்கு வழங்கப்படும் குடிநீர் அளவு குறைவாக வழங்கப்படும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Next Story
