வளச்சி திட்ட பணிகளின் அடிக்கல் நாட்டு விழா,எம்எல்ஏ பங்கேற்பு

X
செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட காரணைப்புதுச்சேரி,நல்லம்பாக்கம், கீரப்பாக்கம், குமிழி,கள்வாய் ஊராட்சிகளில் நியாய விலை கடைகள், புதிதாக ஆறு வகுப்பறைகள், பள்ளி ஆடிட்டோரியம், அங்கன்வாடி கட்டிடங்கள் கட்ட நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். உடன் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் எம்.டி.லோகநாதன் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன் காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு துணை தலைவர் ஏ.வி.எம். இளங்கோவன், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள், மாவட்ட பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் , கிளைக் கழக செயலாளர்கள் , இளைஞர் அணி மாணவர் அணி, மகளிர் அணி தகவல் தொழில் நுட்ப அணி உள்ளிட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Next Story

