வத்திராயிருப்பு வடக்கு ஒன்றியம் சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

X
திமுக ஆட்சியில் ரேஷன் கடையில் அரிசி,பருப்பு, மண்ணெனய் கிடைப்பதில் கை அனைத்தும் வெளி மாநிலமான கேரளாவிற்கு கடத்தப்பட்டு வருகிறது இந்த நிலை மாற வேண்டும் என்று சொன்னால் புரட்சித் தமிழர் எடப்பாடியார் தலைமையில் அம்மாவின் ஆட்சி வர வேண்டும் என்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு.. விருதுநகர் மேற்கு மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி வத்திராயிருப்பு வடக்கு ஒன்றியம் சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் மாத்தூர், மகாராஜபுரம்,சுரக்காய்பட்டி, ஆயர்தர்மம், இலந்தைகுளம் கோட்டையூர்,காடனேரி உள்ளிட்ட 7 கிராம பகுதிகளில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி தலைமையிலும் பூத் கமிட்டி பொறுப்பாளரான கழக சிறுபான்மை நலப்பிரிவு பொருளாளரும் முன்னாள் வாரிய தலைவருமான ஜான்மகேந்திரன், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,கழக மகளிர் அணி துணைச் செயலாளருமான சந்திரபிரபா முத்தையா,மாவட்ட இளைஞர்கள் இளம் பெண் பாசறை செயலாளர் முத்துராஜ், வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்புராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் அழகர்சாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு காடனேரி சிவா, கோட்டையூர் பெரியசாமி, ஜெயராம், வைகுண்ட மூர்த்தி, மாரிமுத்து,உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசிய போது.. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எம்ஜிஆரின் ஆட்சி அம்மாவின் ஆட்சி புரட்சித்தமிழர் எடப்பாடி யார் தலைமையில் அமையும் என்று சொன்னால் ஆணிவேராக இருப்பவர்கள் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள். பூத் கமிட்டி பொறுப்பாளர்களின் உழைப்பால் தான் அண்ணா திமுக என்ற பூ 2026 ல் பூக்க இருக்கிறது.வருகின்ற தேர்தல் அண்ணா திமுகவின் பொற்காலம் புரட்சி தமிழர் எடப்பாடியார் முதலமைச்சராக வர இருக்கிறார். எடப்பாடியார் முதலமைச்சராக இருந்த காலங்களில் எண்ணற்ற நலத்திட்டங்களை கொண்டு வந்தார் விவசாயிகளுக்கு கண்மாய் குளங்களை சீர் செய்து ராஜராஜ சோழனாக அவதாரம் எடுத்து பணியாற்றினார். படிக்கின்ற மாணவர்களுக்கு அம்மா கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி,படித்து முடித்த பெண்களுக்கு திருமண உதவித் திட்டம் முதல் தாலிக்கு தங்கம் திட்டம் வரை கொடுத்தவர் எடப்பாடியார் அவரது ஆட்சியை மீண்டும் வரவேண்டும் என்று எல்லா மக்களும் விரும்புகிறார்கள். விவசாயம்,வணிகம், செய்யும் மக்கள் அடித்தட்டு மக்கள் முதல் மிகவும் கஷ்டப்படும் சூழ்நிலை இன்று இருக்கிறது. இந்த நிலைகள் எல்லாம் மாற வேண்டும் என்று சொன்னால் திமுக வீட்டுக்கு போக வேண்டும் அதிமுக கோட்டைக்கு போக வேண்டும்.ஸ்டாலின் வீட்டுக்கு போக வேண்டும் எடப்பாடியார் கோட்டைக்கு சென்று நாட்டை ஆள வேண்டும் அப்போதுதான் நாட்டில் நல்ல ஆட்சி மலரும். தமிழகத்தில் சரியான சட்ட ஒழுங்கு இல்லை. போதை இல்லாத மாநிலம் தமிழ்நாடு உருவாக வேண்டும் என்று சொன்னால் மனிதர்களை நேசிக்கின்ற மாமனிதர் எடப்பாடியார் முதலமைச்சராக வரவேண்டும். இன்று தமிழகம் திமுக ஸ்டாலின் கையில் சிக்கிக் கொண்டு சின்னா பிண்ணமாகிக் கொண்டிருக்கிறது எங்கு பார்த்தாலும் கலவரம் போதை கலாச்சாரம் விலைவாசிகள் எல்லாம் விஷம் போல் ஏறிவிட்டது பல்வேறு பிரச்சனைகள், விவசாயிகளுக்கு விதை நெல், நெசவாளர்களுக்கு நூல் கிடைப்பதில்லை இதற்கெல்லாம் ஆள தெரியாத ஸ்டாலின் தான் காரணம் திமுகவால் நல்ல ஆட்சியை தமிழ்நாட்டிற்கு கொடுக்க முடியாது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பத்தாண்டுகளில் நல்லாட்சி கொடுத்தார் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வாழும் வரை முதலமைச்சராக பணியாற்றி இந்த நாட்டின் நல்ல தலைவி நல்ல முதல்வர் என்று பெயர் எடுத்து பெருமையைப் பெற்றார். அம்மா கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்திவிட்டது அம்மாவின் திட்டங்கள் மீண்டும் நமக்கு கிடைக்க வேண்டும் என்று சொன்னால் அண்ணா திமுக ஆட்சிக்கு வர வேண்டும் எடப்பாடி யார் முதலமைச்சராக வரவேண்டும். திமுக கொண்டு வரும் திட்டங்கள் வாயிலாக பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் கட்டிட தொழிலாளர்கள் அத்தனை பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று செங்கல் சிமெண்ட், ஜல்லி,கட்டுமான பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து விட்டது. திமுக ஆட்சியில் ரேஷன் கடையில் அரிசி பருப்பு மண்ணெனய் கிடைப்பதில்லை அனைத்தும் வெளி மாநிலமான கேரளாவிற்கு கடத்தப்பட்டு வருகிறது இந்த நிலை எல்லாம் மாற வேண்டும் என்று சொன்னால் புரட்சித் தமிழர் எடப்பாடி தலைமையில் அம்மாவின் ஆட்சி வரவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்
Next Story

