தேசிய அளவில் அண்ணாமலைக்கு கட்சிப் பொறுப்பு - அமித் ஷா உறுதி

X

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அகில இந்திய அளவில் கட்சிப் பொறுப்பு வழங்கப்படும் என அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜகவில் ஏற்பட உள்ள மாற்றம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரனிடம் இருந்து மட்டுமே வேட்புமனு பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை பாராட்டத்தக்க சாதனைகளைச் செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதாக இருந்தாலும் சரி, கட்சியின் திட்டங்களை கிராமம் கிராமமாக எடுத்துச் செல்வதாக இருந்தாலும் சரி அண்ணாமலையின் பங்களிப்பு முன்னோடியில்லாதது. கட்சியின் தேசிய கட்டமைப்பில் அண்ணாமலையின் ஒருங்கிணைப்பு செயல் திறன்களை பாஜக பயன்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
Next Story