திமுக துணைப் பொதுச் செயலாளராக திருச்சி சிவா நியமனம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திமுக துணைப் பொதுச் செயலாளராக திருச்சி சிவா நியமனம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
X
திமுக துணைப் பொதுச் செயலாளராக திருச்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கழக சட்டதிட்ட விதி: 17 - பிரிவு :3-ன்படி கழக கொள்கைப் பரப்புச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் திருச்சி சிவா, எம்.பி.யை, அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, திமுக துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து பொன்முடி விடுவிக்கப்பட்டார். அது தொடர்பாக திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “கழக துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி அவர் வகித்து வரும் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்துவிடுவிக்கப்படுகிறார்.” எனத் தெரிவித்திருந்தார். அந்த அறிவிப்பு வெளியாகி சில நிமிடங்களிலேயே அந்தப் பதவியில் திருச்சி சிவாவை நியமித்து ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Next Story