பங்குனி உத்திர பெருவிழா பாத தரிசனம்.

பங்குனி உத்திர பெருவிழா பாத தரிசனம்.
X
சைவ சமயத்தின் முதன்மை பீடமாக விளங்கும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்தர பெரு விழா... ஸ்ரீதியாகராஜ சுவாமி பங்குனி உத்திர நாள் முன்னிட்டு வலது பாதத்தை காண்பித்து பக்தர்களுக்கு அருள்பாளிப்பு..."
சைவ சமயத்தின் தலைமைபீடமாகவும், கோவில்களின் கோவில் எனவும், சைவ சமய குறவர்களால் பாடல் பெற்றதுமான வரலாற்று சிறப்பு வாய்ந்த ஆலயம் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயம். பல்வேறு சிறப்புகளைக்கொண்ட இவ்வாலயத்தின் வருடாந்திர பங்குனி உத்திர பெருவிழா கடந்த மார்ச் 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிறக்க முக்தி தரும் ஸ்தலமான திருவாரூரில் பக்தர்களுக்கு அருள்பாலித்துவரும் ஸ்ரீதியாகராஜ சுவாமி சிவாலயங்களில் எங்கும் காணமுடியாத நிகழ்வாக மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர நாளில் ஆரூத்ரா தரிசனம் அன்றும், பங்குனி மாதம் உத்திர நட்சத்திர தினத்திலும் வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே தனது பொற்பாதங்களை பக்தர்களுக்கு காண்பித்து அருள்பாலிக்கிறார். மற்ற நாட்களில் ஸ்ரீதியாகராஜ சுவாமி தனது முகத்தை மட்டும் பக்தர்களுக்கு காண்பித்து அருள்பாலிப்பது இவ்வாலயத்தின் தனி சிறப்பு. அதன்படி பங்குனி உத்திர நட்சத்திர தினமான இன்று ஸ்ரீதியாகராஜ சுவாமி சபாபதி மண்டபத்தில் எழுந்தருளி தனது வலது பாதத்தினை பக்தர்களுக்கு காண்பித்து அருள்பாலித்து வருகிறார். காலை 6 மணிக்கு தொடங்கிய பாததரிசனம் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. பாததரிசன விழாவினையொட்டி ஸ்ரீதியாகராஜ சுவாமிக்கு மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் முதலான திரவிய நறுமணப்பொருட்களைக்கொண்டு மகா அபிஷேகம் நேற்று இரவு 11 மணிக்கு தொடங்கி விடியவிடிய நடைபெற்றது. பாததரிசன விழாவில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து நீண்ட வரிசையில் நின்று ஸ்ரீதியாகராஜ சுவாமியின் பொற்பாதத்தை கண்டு வழிபட்டு வருகின்றனர்.
Next Story