அருள்மிகு காமாட்சி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்.

X
வரலாற்று சிறப்பு மிக்க திருவாரூரில் தியாகராஜசுவாமி ஆலயத்தின் மேற்க்கு திசையில் உள்ள மிகபழமையான காமாட்சி அம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா கடந்த செவ்வாய்க்கிழமை யாகசாலை பூஜைகளுடன் துவங்கி நடைப்பெற்று வந்தது. இன்று காலை 4ஆம் காலை யாகபூஜை. மகாபூர்ணாஹீதி,தீபாரதனைகள் நடைப்பெற்றன. தொடர்ந்து யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் எடுத்து ஆலய வலம் வந்து காமாட்சி அம்மன்,விமானம்,நஸராஜகோபுரம் ,சுவாமி விமானம்,சப்தமாதர் சன்னதி விமான கலசங்களுக்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்துவைத்தனர். இதில் ஏராளமானோர் கலந்துக்கொண்டு,கும்பாபிஷேகத்தை கண்டுகளித்து காமாட்சி அம்மனை வழிப்பட்டனர்.
Next Story

