புதிய கட்டிட திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.

X
தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக பள்ளி கல்வித்துறையின் சார்பில் சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் நூலக கட்டடங்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் திருவாரூர் ஒன்றியம், குன்னியூர் ஆகிய பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் வகுப்பறைக் கட்டடங்கள் அடிக்கல் நாட்டுதல் திறந்து வைத்தார்கள். அதனை தொடர்ந்து திருவாரூர் ஊராட்சி ஒன்றியம், குன்னியூர் ஊராட்சியில், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குன்னியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.32.80 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் இரண்டு வகுப்பறை கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டதனை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் செந்தில்வடிவு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஸ்வரி, சுப்ரமணியன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் தேவா உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Next Story

