அகில இந்திய மஜ்லிஸ் கட்சி சார்பில் கண்டன பொதுக்கூட்டம்

X
திண்டுக்கல் மாவட்டம் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி சார்பில் இந்திய ஜனநாயகத்தை பாசிச சங்கப் பரிவார பாஜகவிடமிருந்து பாதுகாப்போம் என கூறி வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி பேகம்பூரில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ரியாஜ் அகமது தலைமையில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி மாநில இணைச்செயலாளர் அகமது மீரான், மாநில தொழிற்சங்க செயலாளர் விக்னேஷ், மாவட்டத் தலைவர் கமல் பாட்ஷா, மாவட்ட பொதுச் செயலாளர் தங்கபாண்டியன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். தமிழ் புலிகள் மக்கள் கட்சி மாநில அமைப்பு துணைச் செயலாளர் போஸ், மரிய திவாகர், எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் பவுசூர் ரகுமான், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாநில செயற்குழு உறுப்பினர் நஜிபுர் ரஹ்மான், திராவிடர் கழகம் தலைமை கழக அமைப்பாளர் வீரபாண்டியன் மற்றும் காங்கிரஸ் கட்சியினர், மூவேந்தர் புலிப்படை, தமிழர் சமூக நீதிக் கழகம், கிறிஸ்துவ மக்கள் முன்னணி, புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி, ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய தேசிய லீக் கட்சி, அகில இந்திய மருதநாயகம் மக்கள் கட்சி, தமிழ் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
Next Story

