கோவை: வெள்ளிங்கிரி மலை ஏறிய பக்தர் உயிரிழப்பு !

கோவை: வெள்ளிங்கிரி மலை ஏறிய பக்தர் உயிரிழப்பு !
X
கோவை மாவட்டம் வெள்ளிங்கிரி மலைக்கோவிலுக்குச் சென்ற காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வெள்ளிங்கிரி மலைக்கோவிலுக்குச் சென்ற காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (வயது 42) என்பவர் தனது நண்பர்களுடன் கடந்த 9-ம் தேதி வெள்ளிங்கிரி மலை சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்வதற்காக மலையேற்றம் மேற்கொண்டார். தரிசனம் முடித்துவிட்டு நேற்று ஆறாவது மலைப்பகுதிக்கு வந்து கொண்டிருந்தபோது, கடும் குளிர் காரணமாக அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக இதுகுறித்து ஆலந்துறை காவல்துறையினருக்கும், கோவில் நிர்வாகத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினரின் உதவியுடன் தற்போது உயிரிழந்த ரமேஷின் உடலை கீழே இறக்கி வருகினர். ஆலந்துறை காவல்துறையினர் நடத்திய விசாரணையில், உயிரிழந்த ரமேஷுக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளதாகவும், அவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story