சாலை விபத்தில் வடமாநில பணியாளர் பலி

X

மதுரை பெருங்குடி அருகே நடந்த சாலை விபத்தில் வடமாநில பணியாளர் உயிரிழந்தார்.
மேற்கு வங்கம் மாநிலம் காக்கியாசக் மல்தா மாவட்டத்தை சேர்ந்த ஜெரல்( 34) என்பவர் தனியார் தொலை தொடர்புத் துறை சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். இவர் ஊழியர்களுடன் திருமங்கலத்தில் கேபிள் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். அங்கு வேலை முடிந்ததும் நேற்று ( ஏப்.11) அவனியாபுரம் செல்வதற்காக வேனில் சென்றனர். அப்போது திருமங்கலம் மாட்டுத்தாவணி ரோடு பரம்புப்பட்டியில் வேன் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் பலமாக அடிபட்ட ஜெரல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story