கோவை: சுக்வார்பேட்டையிள் பங்குனி உத்திர விழா!

கோயம்புத்தூர் சுக்குவார்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் பங்குனி உத்திர திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோயம்புத்தூர் சுக்குவார்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலிலும் நேற்று பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெற்றது. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், கோவை சுக்குவார்பேட்டை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலிலும் அதிகாலை முதலே பக்தர்கள் திரளாக வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், அலங்கார பூஜைகளும் நடைபெற்றன. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசித்து வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.
Next Story